பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

77

செய்து கொண்டே ஆச்சாரியன் என்னும் பட்டந் தாங்கி, ஏகலைவன் என்னும் இளவேடனுக்கு விற்பயிற்ற மறுத்ததன்றி, அவன் தன் வலக்கைப் பெருவிரலை இழக்கவும் செய்தான்.

இராமன் காலத்தவரான அகத்தியர் தென்னாடுவந்து பொதியமலையில், வதிந்து, இடைக்கழக நூல்களைப் பின் பற்றி, அகத்தியம் என்று ஆசிரியனாற் பெயர்பெற்ற முத்தமிழி லக்கணம் ஒன்று இயற்றினார். இதனால் அகத்தியர் காலம்வரை முத்தமிழ் வெவ்வேறு பிரியவில்லை யென்பது தெரிகின்றது. அகத்தியர் காலத்தை யடுத்தவரான நாரதரும் தென்னாடு வந்து பஞ்ச பாரதீயம் என்னும் இசைத்தமிழ் நூலியற்றினார். இது அகத்தியத்திற்கு அல்லது, அகத்தியர்க்குச் சற்றுப் பிந்தியதா யிருத்தல் வேண்டும். எங்ஙனமெனின், அகத்தியர் தென்னாடு வருங்கால் முதற்கண் தண்டக அடவியில் இராமனாற் காணப் பட்டார். பின்னர் இராமன் சீதையையிழந்து தேடினபோது பொதிய மலைக்கு வந்துவிட்டார். அதன்பின், இராமன் சீதையிருக்குமிடமறிந்து இராவணனைக் கொன்று அவளை மீட்டு, அயோத்திக்கு மீண்டு அரசாண்டு வருங்கால் அவளைத்

துரத்திவிட, அச் செய்தியை முற்றும் நாரதர் வான்மீகி முனிவர்க்கு அறிவித்தார் என்று இராமாயணக் கதை யிருத்தலால் என்க.

'இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருநாரை பெருங் குருகும், பிறவும், நாரதன் செய்த பஞ்ச பாரதீயம் முதலாக வுள்ள தொன்னூல்க ளிறந்தன. நாடகத்தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாகவுள்ள தொன்னூல்களு மிறந்தன” என்று அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரைப்பாயிரத்திற் கூறியிருத்தல் காண்க. இதனால், 'பரதசாஸ்திரம்' என்னும் சமற்கிருத நூலுக்கும் தமிழ்ப் பரதமே மூலம் என்பது விளங்கும்.

பாண்ட வ களரவரின் பாட்டனான பீடுமன் பரசுரா மனிடத்தில் விற்பயிற்சி பெற்றவனென்று சொல்லப்படுதலால், இராமாயணக் காலம் பாரதக்காலத்திற்கு ஓரிரு தலை முறையே முந்தியதாகும்.

பாரதப்போரிற் கண்ணபிரான் அருச்சுனனுக்கு ஓதிய ஊக்குரையை அடிப்படையாகக்கொண்டு, ரண்டன்மைக் (சத்துதக்) கொள்கை பரவிய பிற்காலத்தில் ஒரு பிராமணனால் இயற்றப்பட்ட பகவற்கீதையில், 4ஆம் அதிகாரம் 13ஆம் சொலவம்,