பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

குணவினை

தமிழ் இலக்கிய வரலாறு வேறுபாட்டினால் நால்வரணமும் என்னாலேயே படைக்கப்பட்டன. நானே அவற்றின் வினை முதலாயினும், நான் வினையிலியும் வேறுபாடிலியும் என்று அறிவாயாக.'

என்று உண்முரண்படப் புகல்கின்றது.

ஆரியம் என்னும் சொல்

ஆரியம் என்னும் பெயர் இன்று வடஇந்திய மொழிகட்கும் ஐரோப்பிய மொழிகட்கும் பொதுவாக வழங்கினும், முதற்கண் வேத ஆரியர் மொழிக்கும் அவரினத்திற்கும்தான் குறியீடாய் வழங்கிற்று.

ஆர்ய என்னும் சொல், ‘அர்ய' என்னும் அடியினின்றும் ‘ரு என்னும் வேரினின்றும், திரிந்துள்ளதாக மானியர் உவில்லியம்சு சமற்கிருத ஆங்கில அகரமுதலி காட்டி, தலைவன் அல்லது பெருமகன் என்பது அதன் பொருளாகக் கூறும்.

ஒருசில ஆரிய வெறியர், ‘அர்ச்’ என்னும் மூலத்தொடு தொடர்புபடுத்தி, ஆரியன் என்பதற்கு வணங்கப்படத்தக்கவன் என்று பொருள் கூறுவர்.

'அர்ய' என்னும் அடிக்குப் பக்கமான (பக்ஷமான) அல்லது அருமையான என்று பொருள் கூறப்படுவதால், ஆரி என்னும் தமிழ்ச் சொல்லினின்றும்

திரிந்திருக்கலாம்.

அரு-ஆரி

=

66

ஆரியன்

என்னும்

பயர்

1. அருமை. ஆரிப்படுநர்" (மலைபடு. 161). 2. மேன்மை. “ஆரி யாகவஞ் சாந்தந் தளித்தபின்” (சீவக.129), 3. அழகு. (சூடா.) ஆரி-ஆரியன் = மேலானவன், உயர்ந்தோன்.

ஆரியனை எங்ஙனம் தமிழ்ச்சொல் உயர்த்திக் குறிக்க வாண்ணுமெனின், வேத ஆரியரின் முன்னோர் மொழியும் பிராகிருதமுங் கலந்ததே வேதமொழி யாதலாலும், வேத மொழியுந் தமிழுங் கலந்ததே சமற்கிருதமாதலாலும், முதற்காலத் திரவிடமே வட நாட்டுப் பிராகிருதமாதலாலும், அம் மூவகை மொழிகளுள் ஒன்றிலுள்ள ஓர் உயர்வுப்பொருட் சொல்லையே ஆரியர் தம் இனத்தைக் குறிக்கத் தெரிந்து கொண்டனர் என்க.

சென்ற நூற்றாண்டினரான மாக்கசுமுல்லர் என்னும் ஆரிய வெறியரே, ஐரோப்பிய மொழிகட்கும் வடநாட்டுப் பிராகிருதங் கட்கும் ஆரியம் என்னும் சொல்லைப் பொதுப் பெயராக்கினர்.