பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

தமிழ் இலக்கிய வரலாறு

கன்னடத்திலுள்ள வேண்டும்.

உடுப்பியே நக்கீரர் குறித்த ஏரகமாதல்

“ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு

வாமிம லைப்பதி”

என்று பாடிய அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டின ராதலால், அவர் கூற்றுப் பிற்கால வழக்கைத் தழுவியதே.

குன்றுதோறாடல் என்பதும் ஏனையவற்றைப் போல் ஒரு தனி யிடமே. அஃதுள்ள விடத்தைப் பிற்காலத்தார் அறியாது போயினர். குன்றுதோ றாடலுமுரியன் என்னாது,

"குன்று தோறாடலு நின்றதன் பயனே

என்றே நக்கீரரும்,

99

"குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு குன்றவர் சாதி கூடி வெறியாடிக்

கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு குன்றுதோ றாடல் மேவு பெருமாளே

என்று அருணகிரிநாதரும், பாடியிருத்தலை நோக்குக.

“பலகுன்றிலும் " (30), "கிரியெங்கணும்” (653)

"மலையாவையும்” (778)

என்று அருணகிரிநாதர் பாடியிருப் பவையெல்லாம் முருகன் குறிஞ்சி நிலத்தலைவன் என்பதையன்றிக் குன்று தோறா டலைக் குறிப்பனவல்ல.

குன்றுதோறாடல் என்னும் பெயர் வருமிடமெல்லாம், குன்று தோறு மாடல் என்று முற்றும்மை பெறாமையையும் நோக்குக.

முருகன் இருக்கைகளுட் சிறந்தவை திருப்பரங்குன்றம் முதலிய ஆறு படைவீடுகள் என்று கொண்டு, அவற்றுள் ஒன்று குன்று தோறாடல் எனக் குறிப்பின், அது ஒரு தனியிடமாகவே யிருத்தல் வேண்டும். அன்றேல், படைவீடுகள் ஆறென்னும் வழக்கிற்கு இழுக்காகும். குன்றுதோறாடல் என்பது பல மலை யிடங்களில் ஆடலைக் குறிப்பின், அது திருமுருகாற்றுப் படையில் பழமுதிர் சோலைக்குப்பின் இறுதியிலேயே கூறப்பட் டிருத்தல் கூடும்.

பழமுதிர்சோலை யென்பது அழகர்மலை.

து