பக்கம்:பாவியக் கொத்து.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதை"யும் இந்தி யெதிர்ப்புப் பாவியங்களே ! அன்போடும், அறத்தோடும் தொடர்பு படுத்திக் சாட்டப் பெற்றுள்ளன. 'விலாங்கு மாந்தர்களே எவ்விடத்தும் காணலாம். பட்டமரத்துள்' காட்டப்பெ றும் கோழைமை மாந்தர்க்கு-குறிப் பாகத் தமிழர்க்கு வேண்டுவதன்று.

இந்நூல் வெளி வருவதற்குப் பல்லாற்ருனும் முனைந்து முழுத்தொகையினையும் திரட்டியுத வய அவகாசி திரு.வி. க மன்றத்தாரே, சிறப்பாக திரு. ப. துரையரசன் அவர்களே இ த ன் எல்லாச் சிறப்புக்கும் உரியவராவர். என்றும் தென்மொழி வளர்ச்சிக்குத் தோன்ருத் துணையாக நிற்கும் அவரும் அம்மன்றமும் என்மேல் வைத்த அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். மற்றும் இது வெளிவரக் கரணியமாக விருந்த அன்பர் யாவர்க்கும், ஓவியர் திரு.வி. சின்னேயாவிற்கும் என் நன்றி என்றும் உரியது.

கடலூர்-க, சில் க.,தி.பி. - 2000. அன்பன், 16–12 89 துரை-மா.