பக்கம்:பாவியக் கொத்து.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

பாவியக் கொத்து

இருந்தன கண்டாள் இருளகம் கண்டாள்! நெற்றித் துண்டம் தெருப்பாய்க் கனன்றது ஒற்றிய கையோ ஒடிந்த தாமரைத் தண்டுபோல் மடியில் துவண்டு விழுந்தது கயல்விழி உள்ளமோ கயிற்றுமேல் நடக்கும் கழைக்கூத் தாடியின் கைக்கழி போல, 3% மேலும் கீழுமாய் இடமும் வலமுமாய்க் கற்றிச் சுழன்று கொண்டே இருந்தது.

வெற்று வெளியை வெறித்து நோக்கினுள் கருநீ லத்து வானிலே மிதக்கும் ஒருகோடி முகில்களும் இவள் உள் ளத்தே வந்து மொய்த்து வட்டமிட் டிருந்தன! முந்தைநாள் நிகழ்ச்சியோ மூட்டமிட் டிருந்தது!

அவளோ மணந்த ஆயிழை பேதை! துவளா நெஞ்சினள்! அன்பின் தொகுப்பு புதுவைப் பாவலர் குடும்ப விளக்கு 35 புதுமைப் பாவையின் அழகுப் பொலிவு குளிர்ப்பூஞ் சோ ைகற்பின் கொழுந்து! வெளிரோ டாத நீலவான் விரிவு கலங்கிலா நன்னீர்! ஆயினும் குழவியின் இளங்கை வருடா மார்பினள் அவளே மண்ம்நடந்(து) ஏழரை ஆண்டுகள் மடிந்தன! எனினும் மகப்பே றில்லா திருந்தாள்! தாய்மைக் கேங்கித் தவித்தது அவல்மனம்! சேய்முகங் காணத் துடித்தது அவள்விழி மகவு புரளா மடியின ளாகிய 40 அகவாழ் வவட்கே அனற்புழு வாழ்க்கை!