பக்கம்:பாவியக் கொத்து.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணல் திட்டு

மனத்திற் குகந்த மளுளன். எனினும் இனத்திற் கோருயிர் ஈகிலாத் தன்மையால் ஏதோ ஒருகுறை இவளுளத் திருந்தது. ஏதோ ஒருதுயர் இவளைத் தேய்த்தது. உடல்நலந் தேய உள்ளமும் தேய்ந்தது! கடல்போல் வாழ்வில் கலமிலா திருந்தாள்!

இவளருங் கணவன் வாணிக நோக்கன்! இவள் உளக் கூவல் இணைந்தறி கல்லான்! பிள்ளே ஆவலை வாணிகப் பிணிப்பின் 5:3 கொள்ளை ஊதியக் கொழுமையால் மறந்தான்! வாணிகத் தொடர்பால் வெளியூர் வாழ்க்கை பேணிக் கொள்ளும் பெற்றியோன் ஆனன். இம்முறை வெளிநா டேகி இருந்தான்; மும்முறை திங்கள் முழுமை அடைந்தது: கணவன் வெளியூர் இருக்கும் பொழுதெலாம் மணந்தரா வாழ்வைக் கயல்விழி நினைப்பாள்! பெண்ணின் அன்பு பெரியதே. எனினும் பெண்ணின் பேதைமை நெஞ்சமும் பெரியதே!

அழல்எனும் பிரிவை ஆற்றிக் கொள்ளும் 66 விறல்அவள் உணர்வில் விளைவதே ஆயினும் நேற்று நடந்த நிகழ்ச்சியோ கயல்விழி ஊற்றெனும் நினைவிற்கு ஊறு விளத்தது தேற்றிக் கொள்ள முனைந்தும் தோற்ருள்! காற்றில் நெருப்பென எண்ணம் கனன்றது. 'முத்தன்' என்னும் முன்வீட்டு இகளஞன் ஒத்துப் பழகிய பழக்கம் முதிர்ந்தே மாற்றுதற் கின்றி மனத்தை அகலத்தது நேற்று மாலையில் இளையேர்ன் வந்தான்.

87