பக்கம்:பாவியக் கொத்து.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

மயல்மேய் அறிவொடும் மனஞ்செல் நினைவொடும் கயல்விழி காற்றிடைத் துரும்பெனச் சுழன்ருள். மாலை நடந்திடும் நிகழ்ச்சியின் நினைவால் ஆலையில் இட்ட கரும்பாய்த் துவண்டாள்!

பல்லைத் துலக்குவாள்; நெஞ்சம் துலக்கிலள்! வெள்வாய் அலம்புவாள்; மனக்கறை அலசிலள்! அருள்தோய் உருவமுன் நின்றனள்; அஞ்சிலள்! இருள்முகம் கழுவுவள்; இழிவுளம் கழுவிலள்! குழல்நெய் வாருவாள்; குப்பைஉள் வாரிலள்! தழல்முன் அமருவாள்; உளத்தணல் அவிக்கிலள்! ஊணெடுத் துண்ணுவாள்; அறிவூண் உண்கிலள்! மாண்உடை பூணுவாள்; மனத்துடை கலைந்திலன்! வளையும் மானமும் அறிவும் வாய்ந்தவள் இளையோன் எண்ணினுள்; கணவனை எண்ணிலள்! மயங்கினள்; மருண்டனள்; மனமிக இருண்டனள்; தயங்கினள்; வெருண்டனள்; தணலிடைப் புழுவினள்! சாம்பினள், தேம்பினள்; சாறிலள்: iறிலள்; கூம்பினள்; கூசினள்; குறைபடு மாசினள்! எழுந்தனள், நடந்தனள், இளமைகொல் நினைவினள்: விழுந்தனள், புரண்டனள், வெயர்த்தனள்,

அயர்ந்தனள்!

இன்பிலா இன்பம் எதிர்கொள முனைந்தவள் துன்பினர் துன்பம் முழுவதும் தோய்ந்தனள்!

மாலையும் வந்தது! மங்கையும் மயங்கிள்ை! வாலைக் குமரனின் வரவெதிர் பார்க்கையில்