பக்கம்:பாவியக் கொத்து.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {}

மணல் திட்டு

பக்கத்து வீட்டின் பாவை ஒருத்தி 'அக்கா' என்றே அழைத்த வாருய் உள்ளே வந்தாள்; வந்தவள் கயல்விழி வெள்ளை வெளேரென் றிருப்பதைக் கண்டு, மனமிக வருந்தி மணுளனின் பிரிவே 120 கனல்போல் இவளே வாட்டிய தென்று கருதி உளத்தைத் தேற்றப் புகுந்தே இறுதியில் இப்படி இயம்பத் தொடங்கிள்ை:

கடல்மேல் சென்ற கணவனை எண்ணி, உடலும் உயிரும் வருந்துகின் lர்கள்! அவர்மேல் எத்துணை அன்புங் கட்கே' எவர்தாம் இப்படிக் கணவனே நினைந்து தோலும் எலும்புமாய்த் தோற்ற மளிப்பார்? நாளுக்கு நாளும் இளைத்தீர் அக்கா கணவன் மனைவியர் காதல் என்ருல் 130 உணவும் மறப்பதா? உறக்கமும் தவிர்ப்பதா? உங்களைப் பற்றி ஊரில் யாவரும் எப்படிப் பெருமையாய் இயம்பினர்; தெரியுமா? அப்படிப் பேசுதல் அன்ருே பெருமை கற்பின் விளக்கே காதலின் செல்வி பொற்பின் பூணே பூவையர் அரசே!

உங்கட்கு என்றன் உளமகிழ் வாழ்த்து திங்கள் ஒன்றில் திரும்புவர் அதனல் வருத்தம் கொள்ளாது இருங்கள்-என்றே திருத்த மொழிகளைக் கூறினுள் அவளே! 140

பொலபொல வென்றே பொழிந்த உரைபோய் வெலவெலத் திருந்தவள் செவியினிற் பட்டதும் உள்ளம் விழித்ததே! உறக்கம் கலந்தது!