பக்கம்:பாவியக் கொத்து.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

கள்ளம் அகன்றது கற்பும் உயிர்த்தது! தன்னெறி நம்பி ஊர்தனக் கிட்ட நற்பெயர் தன்னை நினைத்துப் பார்த்ததும் அழுந்திக் கிடந்த உள்ளுணர் வெழுந்தே புழுங்கிக் கிடந்த புரையை அவித்தது! நலிந்திடப் போகும் நங்கையை ஊரார் புகழ்ந்த கூற்றினல் நாணம் புகுந்தது! 150

புகுந்த நாணம் புன்மையைச் சுட்டது! தகுந்தவ ளென்ற தகுதியைத் தந்தது! ஊரார் உரைத்த உரைக்குத் தக்கதாய் நேர்வழி நடக்கும் நினைவு வளர்ந்ததும் உறங்கிய அறிவும் ஊற்றுக் கொண்டது! கிறங்கிய நிலைபோய் கயல்விழி கிளர்ந்தாள்!

மூண்ட அறிவால் முன்னுள்ள பாவையின் கீண்ட நிலாப்பிறை நெற்றியை நீவி முத்தம் மொழிந்தாள்; முறுவல் மலர்ந்தாள்! 160

புத்தம் புதிய உணர்வொடும் அப்பெண் சென்றதும் கயல்விழி சறேலென எழுந்து கிடுகிடு வென்றே கிணற்றுக் கோடி விடுவிடு வென்று பெரிய வாளியால் இருபது வாளித் தண்ணீர் இறைத்துக் குளிரக் குளிரத் தலையில் கொட்டினுள் உடல்குளிர்ந் ததுபோல் உளமும் குளிர்ந்தது! கடல்போல் நெஞ்சினல் கணவனே வாழ்த்தினுள்:

குளித்து முழுகிக் குழல்நீர் சொட்ட வெளிர்நிறச் சீரை விரித்துடல் உடுத்து மஞ்சள் நெற்றியில் செஞ்சாந் தணிந்தே 170

9 |