பக்கம்:பாவியக் கொத்து.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்ட மரம்

மு ன்னுரை.

(சிற்சில நேரங்களில் மாந்தனுக்கு ஏற்படுகின்ற உலகியல் அழுத்தங்கள் உள்ளத்தில் ஒருவகை வெறுப்புணர்வைத் ேத ற் று வி க் கி ன் ற ன ஆளுல், ஏதாவதொரு கொள்கைப் பிடிப்புள்ள உள்ளங்களை அவ் வுணர்வு ஒரு சிறிதும் தாக்குவ தில்லை. கொள்கையற்ற வெறுமை உள்ளங்களே அச் சூழல்களில் முங்கித் தவிக்கின்றன; நிலைகுலை கின்றன. வாழ்க்கையில் வெறுப்புற்று, உயி ரியக்கத்தையும் அழித்துக் கொள்ளத் தூண்டு கின்றன. அக்கால் அத்தகைய உள்ளங்களுக்கு விழுப்பம் உடையாரின் வாய்ச் சொற்கள் பெரிதும் ஆறுத லளிக்கின்றன; வாழ்க்கையின் போக்கையே மாற்றிக்கொள்ளத் துணை நிற்கின்றன; வறண்டு காய்ந்து கிடக்கும் அவ் வுணர்வுகளுக்கு அவ் வாறுதல் மொழிகள் குளிர்ந்த நீரைப்போல் பசுமை ஊட்டுகின்றன. சோர்வடைந்து பட்டுப் போன அவ் வுள்ளங்களை மீண்டும் செழித்துக் குலுங்கச் செய்கின்றன. பள்ளமும் மேடும் நிறைந்த உலகியல் போராட் டங்களில் சிக்கிச் சுழலும் உள்ளங்கள் கிளர்ச்சி யுறும் பொருட்டு எழுதப் பெ ற் ற து இது. அமைதி வேண்டுவார் படித்துத் தேறுவாராக.)