பக்கம்:பாவியக் கொத்து.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக் கொத்து

நுழைவாயில் உரை

(சொல்லாய்வறிஞர். ப. அரு ளி, வணி.இ. ச.இ.)

பல்வேறு பாவினங்களால் மிடையப்பெற்று, ம ன ம் பரப்பி நிற்கின்ற இப் பாவிய நூல், - பத்துச் சிறுகதை யமைப்புகளையுள்ளடக்கிய,-நறுஞ்சொற் பூக்களால் யாத்துக் கோத்தெடுக்கப் பெற்றுத் தொங்கி யொளிர்கின்ற ஒரு தூமாலைக் கடையாகக் காட்சியளிக்கின்றது:

இ’து, ஓர் இண்ரூழ்த்து மணக்கும் அணிமலர் நூல்மாலேக் காடு! இவ் விருபதாம் நூற்ருண்டின் பத்துப்பாட்டு: யாத்துக் கோத்தவர், அறிவெழில் நிறைவுறை. ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனர் அவர்கள் ஆவார். அவரின் ஒள்விளமைக் காலத்தும் நள்ளிளமைக் காலத்தும் புறம் பெயர்த்துத் தொடுக்கப்பெற்றுள்ள இப் பாமாலை ஒவ்வொன்றனுள்ளும், அவரின் இன்றைய உரத்திறமணத்தையும், பசிய உள்ளத்தை யும், கெர்ள்கைப் பூட்கையையும், கோளரிமாப் போக்கை யும், இடைநெகிழா நோக்கையும், திறய்ைவாளன் ஒருவன் மேம்போக்காகவே கூட கண்டு தெளியக்கூடுவான்!

பா ஒவ்வொன்றும் ஒளியவும் எளியவுமான சொற்களால் புனைவுறுத்தப் பெற்றிருத்தலால், - கருத்தும் அதன் விளக்க மும் தெளியவும் பொலியவுமாகி விளக்கொளிறுகின்றன:

கருத்துகளுக்கும் காட்சிகளுக்கும் ஏற்ற பாவின இயக்க

வொழுங்கு, பாச்சுவை வேட் கும் அறிவினர்க்குப் பகி தணிக்கவல்ல தன்மையன.