பக்கம்:பாவியக் கொத்து.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பட்டமரம் (1964)

திங்களிலா ஒருநாளில் ஊர்துயின்ற பின்னை

தீயவரும் உள்நடுங்கும் வல்லிருளில், உள்ளம் முங்கிவரும் பேருணர்வால் எழுந்து நட மாட,

மொய்த்ததுயில் களைந்தெறிந்து கடற்கரையை நண்ணி, கங்குலிட்ட பெருவானம், நெடுங்கடல்,விண் மீன்கள்

கண்டுகண்டு மகிழ்ந்திருக்கும் நல்லின்பப் போழ்தில், பொங்கிவரும் வாங்கலைக்குள் ஆங்கொருவன் பாயப்

போகையிலே ஓடோடி நான்தடுத்து நின்றேன். I

நின்ற,என நோக்கி அவன் விம்மியுளம் நொந்தான்!

நெட்டுயிர்த்து நெடுந்தரையில் விழ்ந்தறைந்து

- - கொண்டான்! ஒன்றுமறி யாதவனுய், என்னவென்று கேட்டேன்.

ஒவென்ருன்; 'ஆ'வென்ருன் ஏன்தடுத்த்தீர்' என்ருன்,

94