பக்கம்:பாவியக் கொத்து.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

'நன்றுகொலோ நின்செயலும்; தற்கொலைசெய் மாறு

நடந்ததென்ன? கூறு'கென்றேன்; அவனழுது பொங்கி, கொன்றுகொள்ள வந்தவன்யான்; கொடுந்துயரம்

பட்டேன்

கூறுகிலா இழிவெனக்கு வந்த தெனச் சொன்னன், 2

'திக்காட்டின் நடுவினிலே, எரிமலையின் உள்ளே,

திக்கறியாக் கடல்நடுவில் இருட்சுழலின் ஊடே, நோக்காட்டின் துயர்மழையில் வீழ்ந்ததுபோல் என்றும் நொடிக்குநொடி தாழ்ந்திழியும் புல்லியரின் உள்ள வேக்காட்டைத் தாளாமல் தொல்லைபொறுக் காமல்,

விம்மியழும் நெஞ்சத்தைத் தணிக்கவிய லாமல் சாக்காட்டின் மடியினிலே தலைசாய்க்க வந்தால்

சாகும்முன் நீங்களென ஏன்தடுத்தீர்’ என்ருன் 3.

'கடும்புயலில், வெம்பசிகொல் வல்வேங்கை முன்றில்,

கவுள்நனைய மதம்பெருக்குந் தனிக்களிற்றின் சூழ்வில், கொடும்பாம்பின் உடல்நெருக்கில், கொதிக்கின்ற நெய்யின் கொப்பரையுட் பட்டதுபோல் கொடுங்கயவர் செய்யும் அடும்பகைமை தாளாமல் உயிருடலங் காய்ந்தே

அறுத்தெடுக்கும் துயர்அரத்தை நிறுத்தவிய லாமல் நெடுந்துயிலின் நல்லணைப்பில் அமைதியுற வந்தால்

நேர்வதன்முன் நீங்கள்ெனை ஏன்தடுத்திர் என்ருன். 4

பிறப்பென்னும் கண்விழித்த நாள்முதலா உள்ளப் பீடழிக்கும் கீழ்மையரின் குடியிருப்புக் குள்ளே சிறப்பென்னும் வாழ்க்கையிலே ஒருதுளியும் காணுச்

சிறுமைமிகு நெடுந்துயரின் குத்தல்பொறுக் காமல்மறப்பென்னும் உளத்துக்கம் தூங்கமுடி யாமல்,

மனத்திருக்குஞ் சுமையிறக்கும் வகையையுன ராமல்

35