பக்கம்:பாவியக் கொத்து.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்ட மரம்

இறப்பென்னும் மாளிகையில் கண்துயில வந்தால்

இறந்திடுமுன் நீங்களென ஏன்தடுத்தீர்' என்ருன். 5

'சூழ்ந்திருக்கும் பெருந்துயருள், நெருஞ்சி முள்ளின்காட்டுள், சுட்டெரிக்கும் வெயில்நெருப்புள் புகலிடத்தைத் தேடி வாழ்ந்திருக்க முடியாமல்-வழிவகைகா ளுமல்

வம்புரைக்கும் கள்ளரவர் நெம்புரைக்குள் மேலும் ஆழ்ந்திருக்க வியலாமல்-ஆவியினைப் போக்க,

அணுவணுவாய் உளந்துணிந்தே, கடல்நடுவில் தாவி வீழ்ந்திறக்கும் மகிழ்ச்சியிலே நான்முழுக வந்தால்

வீழ்வதன்முன் நீங்களென ஏன்தடுத்தீர்' என்ருன். ச

என்றவனைத் தேற்றிஅவன் தோளினில்கை சார்த்தி

‘என்னருமைத் தமிழ்மகனே, வருகவெனக் கூட்டிச் சென்றவனே முன்னமர்த்தி, அருகமர்ந்து தேற்றி,

"செந்தமிழ்த்தாய் திருமகனே, நின்துயரம், மானம் குன்றளவு பெரிதெனினும், வானினுயர் வெனினும்,

கோழையென மாய்ந்தொழிதல் யார்க்குநலஞ் செய்யும்? இன்றுனது பேரிழப்பால் எவர்வருந்தப் போவார்?

எத்தனைநாள் நின்வருத்தம்? எண்ணிப்பார் என்றேன்.

'இனித்திருக்கும் வாழ்க்கையன்றிங் கிருக்கின்ற யார்க்கும்! எதிர்வரும்ஒவ்வொருநொடியும் துன்பப்போராட்டம்; பனித்திருக்கும் மென்மலரை அகப்புறக்காம் பாய்ந்து,

பஞ்சணையில் தூவியுடல் சாய்ந்திருப்பார் தாமும், துணித்திருக்கும் பெருந்துயரால் உளம்புழுங்கு கின்ருர்!

துன்பமெனும் குளிர்காற்று யாரைவிட்டு வீசும்: தனித்தொருவன் சாவதனால் துயர்விலகல் இல்லை;

தாங்குபவன் எவனவனே நல்லின்பம் கண்டான். 8

96