பக்கம்:பாவியக் கொத்து.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

முன்வைத்த முதலில், கண் வைத்தார்கை வைக்க,

முதிர்வுள்ளம் வையாமல் உயிர்வையார் கோடி! மின்வைத்த இடைவைத்தாள் மனம்வையா மைக்கே.

மெய்வைத்த நல்லுயிரைப் போட்டுடைப்பார் கோடி! பொன்வைத்த நினைவினராய்ப் பொய்வைத்த வாழ்வில்

புகைவைத்துக் கொண்டவர்கள் எண்ணிறந்த கோடி! மன்வைத்த உயர்நினைவை மனம்வைத்து நிற்கும்

மாந்தரினம் என்வைத்திங் கென்னபயன் என்றேன். 9

துன்பமெனும் பெயரொன்று; வல்லுருவம் கோடி!

துயர்க்கென்றும் வருந்தாமல், உள்ளஞ்சோ ராமல்,

தன்புதுநோக் கொன்றினையே நோக்கிப்போ வார்க்குத்

தாங்குகிலாத் துயரென்றிவ் வுலகெங்கும் இல்லை;

இன்பமென ஒன்றினையே குறிக்கோளாய்க் கொள்வார்,

இம்மியதில் குறைந்தாலும் தாங்குகிலார் துன்பம்!

மன்பதையின் விளைவெல்லாம் இன்பமடா இன்பம்!

மற்றதற்குத் துன்பமெலாம் உள்ளப்பே ராவல்! 10

உழைப்புண்டு; திறமுண்டு; மெய்வருந்தில் என்றும் உற்றவிளை வுண்டதல்ை உய்வுண்டு யார்க்கும்: பிழைப்புண்டு; வாழ்வுண்டு பேரின்பம் உண்டு!

பிறைநுதலார் உளம்பொங்கிக் கயல்விழியால் வெளவும் அழைப்புண்டே அன்புண்டே அறவாழ்க்கை உண்டே!

ஆரெவர்க்கும் கரவாத மெய்வாழ்க்கை தோன்றின் தழைப்புண்டு மாந்தர்க்கே தற்கொலையா வாழ்க்கை?

தனியொருவன் உயிர்குடித்தால் கடல்வற்றிப்போமோ? தாங்குகிலாத் துன்பமென நீபுலம்பு கின்ருய்!

தந்தைதாய் மாண்டனரா? மனைவியுமாண் டாளா? வாங்குகிலா வருத்தமென நீயழுங்கு கின்ருய்!

வளர்த்தமகன் செத்தான? தம்பியிறந் தான?

97.