பக்கம்:பாவியக் கொத்து.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்ட மரம்

தூங்குகிலாத் துயரமென நீயரற்று கின்ருய்!

தோழனை நீ இழந்தனையா? ஈங்கிவர்யா ரேனும், நீங்கிடுநின் குற்றுயிரால் மீண்டிடுதல் உண்டா?

நின்னிறப்பால் என்னபயன் நேர்ந்திடப்போம்?

என்றேன்,

'ஏறிவரும் நின்துயரம் என்னுருவா கட்டும்;

இடர்ப்பாட்டை நல்லறிவால் நின்றெதிர்ந்தே, உள்ளம் விறிவரும் நல்லுணர்வைக் கொண்ட,உயர் வாழ்க்கை விளங்கிவரு மாறுபிறர்க் கெடுத்துரைத்துத் தீமை நாறிவரும் மண்ணுலகைப் பொன்னுலகாய்ச் செய்யும்

நல்லபணி யொன்றினுக்கு நினையாக்கிக் கொண்டால், ஆறிவரும் நின்துயரம், ஊறிவரும் இன்பம்!

அனைத்துயிரும் நின்தொண்டால் மாறிவரும் அன்ருே?

தான்பிறந்த நாட்டுக்கும், தாய்மொழிக்கும் செய்யும்

தனித்தொண்டே தலைத்தொண்டாம்;

- பொதுத்தொண்டு செய்யார் மான்பிறந்த கூட்டத்துள் பன்றிபிறந் தாற்போல்,

மயில்பிறந்த குழுவில்வான் கோழிபிறந் தாற்போல், கான்பிறந்த அகிற்காட்டில் கள்ளிமுளைத் தாற்போல்,

கடல்பிறந்த சிப்பிக்குள் பாசிபிறந் தாற்போல், ஏன்பிறந்தார் எனிமக்கள் எண்ணிடுவார் ஆக்

எவ்வுயர்வும் சேர்கிலர்ாய் வீணழிவார் என்றேன். 14

ஆகையில்ை, தமிழ்மகனே, செந்தமிழ்ந்த் ருய்க்கும்,

அன்றலர்ந்த தமிழ்நாட்டின் வாழ்வினுக்கும் உன்னை

ஈகையெனத் தந்துவிடில், நினக்குற்ற துன்பம்

எரியிரும்பின் முன்னர்வரும் ஈக்கூட்டம் போலாம்!

சாகையிலும் தண்டமிழை வாழவைத்துச் சாவாய்!

சாகாத பெரும்புகழைக் காவலிட்டுப் போவாய்!

38