பக்கம்:பாவியக் கொத்து.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

வேகையிலும் நின்னுடலம் தமிழ்மணந்து வேகும்!

வெற்றுயிரும் செந்தமிழால் ஒளிசிந்திப் போகும்! 15

'தொடர்ந்துவரும் பெரும்புயல்ால் ஒளிமழுங்கு மணிபோல், தொல்தமிழ்க்குச் சேர்ந்ததுகள் துடைத்தெடுத்து,

மேன்மேல் படர்ந்துவரும் பிறமொழியாம் வல்லிருளைப் போக்கிப், பரவிவரும் அறிவியலால் பட்டைபல தீட்டிச் சுடர்ந்தொளிசேர் மாமணியாய், உளவிளக்காய் மெய்ம்மைச்

சூடேற்றி மருள்.உலகில் உலாவரவும் விட்டால், அடர்ந்து பிற மொழியனைத்தும் ஏவல்செய் யாவோ?

அனைத்துலகும் செந்தமிழ்க்குக் காவல்செய் யாதோ? 16

"செத்தொழியும் எண்ணத்தைக் கழற்றியெறி என்றேன்;

"சீர்சும்ந்த தமிழ்த்தொண்டைப் பூணுகநீ என்றேன்: 'மத்தொழித்துத் தயிர்கடைதல் இல்லையடா இல்லை:.

மனம்நீக்கி உயிர்கடைதல் என்னபயன் செய்யும்? வித்தொழிந்து விளைவுண்டோ? தமிழ்வித்தை ஊன்றின் விளைவதெல்லாம் நல்லொழுக்கம். வாய்மை. அறம்,

அன்பே ! முத்தமிழை மெய்யுணர்வாம் உருப்பெருக்கி கொண்டே,

முன்னிநிலை ஆய்ந்தவர்கள் காணுநிலை ஈதே! 17

உயிர்கசந்த செந்தமிழா, உனக்கொன்று சொல்வேன்;

ஊழ்க்கின்ற நல்லுயிரைச் செந்தமிழ்க்கென்றுாழ்க்க: பயிர்போலும் காய்ந்ததது. தொண்டுமழை யின்றி;

பகலிரவாய், தெருத்தெருவாய், ஊர்ஊராய்ச் சென்றே, அயர்வின்றிச் செந்தமிழ்த்தொண் டாற்றுக:நின்

- தொண்டிால்

அடிகாயா முடிகாய்ந்த தமிழ்ப்பயிரும் வாழும்:

99