பக்கம்:பாவியக் கொத்து.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்ட மரம்

துயர்காணின் பேருவப்பால் தோள்தாங்கிக் கொள்வாய்!

தொல்பெருமை அகழ்ந்தெடுப்பாய், புகழ்வாரிச்

செல்வாய்!”

என்றபடி யானுரைக்க அவனிருந்து கேட்டான்;

இறங்குமுகந் தூக்கியென ஏறிட்டுப் பார்த்தே, "குன்றுபடி யாயிருந்த நல்லுணர்விங் கென்பால்

கூர்த்தபடி உயர்ந்ததுவே குளறுபடி யின்றி! இன்ருெருநாள் வாழ்க்கையிலே இறந்தெழுந்த நாளாம்!

இருள்வழிச்செல் மருள்மதிக்கே அருள்மொழிதந் தீர்கள்! நன்றுசெய்வேன்; இன்றுசெய்வேன்! என்றுமினிச் செய்வேன்; நான்பிறந்த நாடு,மொழி தமக்குத்தொண் டென்ருன்

ஆருக்கும் உதவாமல் எனக்குமுத வாமல்:

ஆருயிரைப் போக்கவந்தேன். காய்ந்தெனது நெஞ்ச வேருக்குள் பால்பொழிந்தீர்; செழுசெழுத்த துள்ளம்!

விடிவுற்ற தென்வாழ்க்கை; தெளிந்ததுயிர் என்ருன்! "யாருக்கும் யார்சுமையும் யார்பகையும் இல்லை;

யாக்கையெலாம் தோல்தசையும் நார்நரம்பு மாகும்; நீருக்குள் குளிர்போல, நெருப்பின்ஒளிச் சூடாய்,

நின்றதொரு வெற்றுடற்குள் நின்றதுயர் நெஞ்சம் 20

பூவினுக்குள் மணம்போல நெஞ்சலர்ந்து வீசும்

புதுமணத்தைத் தானுணரான் புறநாற்றம் மோப்பான்; யாவினுக்கும் உள்ளதொரு வித்துப்போல் உள்ளம்.! யாக்கையெலாம் காய்கனிபோல் பிறர்க்குதவல்

வேண்டும்; மாவினுக்கும் பலவினுக்கும் தனித்தனிதோற் றம்போல்,

மாந்தருக்குள் பலதோற்றம்: நாற்றமும்அவ் வாறே! ஆவினுக்கும் குதிரைக்கும் அரற்ருெலிபோல் மக்கள்

அரற்ருெலியே உளங்கலக்க மொழிமலர்ந்த தென்றேன்

100