பக்கம்:பாவியக் கொத்து.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவிய க்கொத்து

தோன்றுமுயிர் பலவாக மொழிபலவு மாகித்

துலக்கினவே நல்லறிவை; விளக்கினநல் உள்ளம்! ஊன்றுசெடி போலுமுயர் ஆல்போலும் பாரில்

உலவுமொழி பலவெனினும், உலகமெனும் நற்ருய் ஈன்றமுது மொழிகளுக்குள் பழந்தமிழும் ஒன்றே!

இணரிணராய்ப் பூத்தமலர், சிம்புமிலா ருர்ந்தே ஆன்றுயர்ந்த ஆல்போல உணர்வெழுந்த தாயாய்

அனைத்துயிர்க்கும் உளம்மலர்த்தும் மொழிதமிழே

என்பேன் 22

"முங்குபொருள் பலவினுக்கும் பயன்பலசேர் தல்ப்ோல்,

முகிழ்த்தமொழி அத்தனைக்கும் இடம், பொருள், பல்

நோக்கில் தங்குபயன் பலவுடைத்தே! புறஅறிவுக் கொன்று:

தழலுக்குள் சூடேபோல் அகஅறிவுக் கொன்று; பொங்குணர்வுக் கொன்றுயர்வாம் மெய்யறிவுக் கொன்று:

போக்குதனக் கொன்றுலகப் புத்தறிவுக் கொன்று; கங்குலிலே ஒளிபோலப் பலபயனும் ஒன்றிக்

காழ்த்தமொழி தமிழ்மொழிபோல் யாண்டுமிலை,

என்பேன் 23

'உள்ளுணர்வால் கண்டறியார் புறங்கண்டு விள்ளார், உலகவுயிர்க் கிறுதிநிலை அறிவியலால் இல்லை; தெள்ளுதமிழ்ப் பயன்துய்ப்பார் மெய்ப்பயனைக் காண்பார்! திறந்தபிற சுவடிகளில் மெய்த்தமிழ்ப்பாங் கில்லை; அள்ளுபயன் சிறிதெனினும் ஆக்குபயன் ஆர்ந்தே

அகத்துமுதல் தமிழ்ச்சுடர்போல் பிறிதில்ஒளி இல்லை: எள்ளுநிலை வந்ததெலாம் ஏற்றநிலைக் கூற்றே!

எனவே, நின் நல்லுயிரால் தமிழ்வளர்ப்பாய் என்றேன்

10t