பக்கம்:பாவியக் கொத்து.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுகல்

முன்னுரை.

(கொள்கை உரம் உடையார்க்கும் காதல் ஒரு தடையாயிருப்பதில்லை. எனினும் அத்தகையார் கொள்கைக்கே தம் முதல் மதிப்பைத் தருகின்ற னர். அவர்களை விரும்பும் மங்கையரும் தாம் மணக்கப் போ கு ம் மறவர்தம் போராட்ட உணர்வைத் தம் காதலன்பினும் மேலாகவே மதிக்கின்றனர். அவர்களுக்குத் துணை கி ன் று கொள்கைக்காகப் போராடிச் சாவதையும் அத் தலைவியர் பெருமையாகவே கருதுகின்றனர்.

இணையத் துடித்த இரண்டு இளமை உள்ளங் கள். கொள்கைக் கெனப் போராடிச் சிறைப் பட்டன தமிழ்காக்கச் சிறைப்பட்ட அவ் விளங் காதலர்களுக்கு அதைவிட இன்பம் வேறென்ன விருக்கும்?

இறுதியில், தமிழை வாழ்விக்கப் போராடிய அவர்கள், தம்மை வாழ்வித்துக் கொள்ள முடி யாமலேயே போயினர். ஆயினும் அவர்களின் சாவுப் பட்டயம் அவர்களைப் போன்ற பிறருக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்தது. பொய்யாத் தமிழ்மரபின் வாழ்வைப் புதுப்பிக்கப் போரா டிய அவர்தம் வுேண்டுகோள் தமிழர்க்கு ஓர் உணர்வுப் பாசறை!) - - -