பக்கம்:பாவியக் கொத்து.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுகல் (1964)

(சிறையிலிருக்கும் முத்தன் தன் காதலிக்கு மடல் எழுதுகின்ருன்) 'முத்தழகி உன்அத்தான் முத்தன் எழுதுவது: பித்தாகிப் போகாதே! பேதைமனம் நோகாதே! இங்குநான் சென்னைச் சிறையில் இருக்கின்றேன்! அங்குநீ விம்முவதும் அப்படியே பொத்தென்று கீழே விழுவதும் உள்ளத்தில் காண்கின்றேன்) தாழம்பூ வே! நீ தனித்திருக்க விட்டுநான் துன்பச் சிறையில் கிடந்து துவளுவதை இன்பமென்ரு எண்ணுவேன்? இன்னுங்கேள் நீமகிழ்வாய் கம்பிச் சிறைபுகுந்தேன் என்று கழறியதும், வம்பு வழக்குகளில் வந்தனென எண்ணுதே! 10 அந்தப் படிநான் அணுவளவும் வாழ்ந்ததில்லை: வந்து புகுந்த வகையை உரைப்பேன் கேள்;

104