பக்கம்:பாவியக் கொத்து.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

பாழான இந்தி படரிருள்போல் பைந்தமிழை வாழாமல் செய்யும் வகையைத் துணிந்தெதிர்த்தேன்: நாம்பிறந்த நாட்டிற்கும் செந்தமிழ்க்கும் கேடுவந்தால் தாம்பறுந்த காளையென உள்ளம் தழலாதோ?

கொஞ்சும் தமிழின் குரல்வளைக்குத் தீதென்ருல் நெஞ்சந் துடிக்காதோ கூனும் நிமிராதோ?

போக்கற்ற இந்தி, தமிழைப் புதைப்பதெனில் தாக்குற்ற செந்தமிழர் தக்கைகளா, பார்த்திருக்க: 20

உள்ளத்திப் பற்றி உடலெரிந்து சாகையிலே, வெள்ளத் தமிழுணர்வு வீறிட்டுப் பொங்காதோ?

ஆகையில்ை வெஞ்சிறைககே ஆளானேன் ஆருயிரே! வாகைப்பூச் சூடி வருகின்றேன்; காத்திருப்பாய்!

என்னைத் தவருக எண்ணுதே! என்னுள்ளம் பொன்னைப் பழித்தொதுக்கும்! பூவே, நீ என்றனுயிர்! மூவிரண்டு திங்கள் முடிந்தவுடன் நான்வருவேன். பூவிரண்டு காம்பொன்ருய் வாழ்க்கை புதுக்கிடுவோம்! பெற்ருேர் இசைந்தபின்னே பேச்சென்ன நம்மணத்தைக் கற்ருேர் குழுமிக் களிப்போடு வாழ்த்துரைக்க 30 நன்றே முடிப்போம்:இந் நம்பிக்கை மாருதே! குன்றேறும் மான்போல் குடிவருவாய் என்தோளில்! நெஞ்சம் நலியாதே; நின்னுடலை வாட்டாதே! அஞ்சாதே! இங்குன் அழியா நினைவினிலே செந்தமிழ்க்கு வந்த சிறுமை அழித்திடுவேன்! சிந்துமிழும் வாயே, சிரி! "

105