பக்கம்:பாவியக் கொத்து.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 05

நடுகல்

(சிறையில் வாடும் முத்தலுக்கு முத்தழகி எழுதும் விடை மடல்)

'அன்புள்ள அத்தான்! அருமை மடல் நான்பெற்றேன் பின்புதான் உங்கள் பெருங்கடமை நெஞ்சுணர்ந்தேன் நீங்கள் நினைத்ததுபோல் விம்மிற்று. நெஞ்செனினும் ஏங்கியுடல் வீழவில்லை; ஏற்றமொடு நின்றிருந்தேன்! 40 'காத்திருப்பாய்’ என்பதுங்கள் கையெழுத்தா?

நெஞ்செழுத்தா? பூத்திருக்கும் முல்லைப் பொலிவழித்தீர் என்ருலும்,

தக்கையன்று உங்கள் தடந்தோள்கள்’ என்றறிந்து திக்கறியா இன்பில் திளைத்திருந்தேன்; பொன்அத்தான்! மண்ணன்றே உங்களுளம்; மானுந் தமிழ்மரபின் விண்ணென்று கண்டு வியந்து மகிழ்ந்திருந்தேன்!

உள்ளம், உயிர் உடல்ம் எல்லாம் உவகையில்ை

துள்ளியதை என்சொல்வேன்? தொல் தமிழ்மேல்

வந்தபகை

போக்கச் சிறைபுகுந்தீர்! உள்ளம் புடைக்காதோ?

காக்கும் பெரும்படையில் காதலரும் சேர்ந்திருக்கும் 50 வெற்றி நினைவென்னை வீழாமல் காத்ததென்பேன். நெற்றி குளிர நினைவிழந்து நின்றிருந்தேன்,

அத்தான்!நான் ஒன்றுரைப்பேன்; அன்னைத்

- தமிழ்க்குடலம் செத்துமடிந் தீரெனினும், செம்மாந்து நான்சாவேன்.