பக்கம்:பாவியக் கொத்து.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

ஆலுைம் அத்தான், அடியவளும் தாழ்ச்சியில்லை! தேனை செய்தி தெரிவிக்கப் போகின்றேன்!

மூவிரண்டு திங்களும் நாளுக்கு மூவேளை ஆவின்நெய் ஊற்றி அமிழ்தம் படைத்தாலும், எட்டிக் கசப்பாய் எனக்கிருக்கும்; நீங்களங்கு கட்டிக் களியுருண்டை காத்திருந்து வாங்கியுண்ண 60 எவ்வாறு நானிங்கே ஏங்கித் துயர்ப்படுவேன்! ஒவ்வாது நெஞ்சம்! எனவே நான் ஒன்றுரைப்பேன்;

செந்தமிழ்க்கு நானும், எனக்குத் தமிழ்அமிழ்தும் சொந்தமத்தான்.சொந்தம்!உலகளவுசொந்தமென்பேன்: நானும் தமிழச்சி! என்குடியும் தொல்குடியே! ஈனும் புலிக்குடும்பம் பெண்குட்டி ஈன்ருலும் பூனையென் ருய்விடுமோ? பூந்தமிழும் என்னுயிரே! தேனும் புளிக்காதோ, செந்தமிழை மாந்தியபின்?

அத்தான்,இவ் வூரில் அணிவகுத்த போர்ப்படையில் 'முத்தழகி என்றென் பெயரை முதல்கொடுத்தேன்! செந்தமிழும் பேசாத ஊரில் உயிர்வாழேன்! செந்தமிழும் பேசாத் தெருவில் குடியிருக்கேன் இந்திவரின் நந்தமிழர் ஏற்றம்போம்! மானம்போம்! முந்தி யதனை முறியடிக்க நானும்,என். சிற்றுயிரைத் தந்தேன்; திரும்பி வரின்மணத்தைக் கற்றவரைக் கொண்டு கடிதில் முடித்திடலாம்: நேற்றுவரை உங்கள் நினைவால் துயருற்றேன்; ஆற்றுவாரின்றி அணுவணுவாய்த் தேய்ந்திருந்தேன்! இன்றே மடல்பெற்றேன்; என்றன் உயிர்பெற்றேன்!

107