பக்கம்:பாவியக் கொத்து.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுகல்

நன்றுதான்! இவ்வுடலம் செந்தமிழ்மண் நல்கியதாம்! இந்திக் கொடுமையிலே எந்தமிழ்த்தாய் மாள்கையிலே குந்தி யிருக்கவா? தாளேன்; கொலைவாளைத் தூக்குவேன்; இந்தி உடலைத் துணித்திடுவேன்! யாக்கை இனிப்பில்லை; நீர்மேல் எழுத்தென்ருர்! நல்லுயிர்க்கு மானம்உயிர் நங்கையர்க்கோ

அஃதியற்கை! வல்லுடலும் மானமதில் வாழ்ந்திருந்தால் தான்வாழும்!

உங்கள் துணைவி ஒருத்தி, தமிழ்மறத்தி! பொங்குணர்வுக் காரி: தமிழைப் புறம்பழித்த இந்திதனைச் சாகடித்தாள்: ஆகையில்ை

. செத்தொழிந்தாள்' இந்த உரையுங்கட் கின்பத்தைச் சேர்க்கட்டும்! 90 என்ன்ரும்ை அத்தான்! எனக்கு விடைகொடுங்கள்! பின்னிருந்தால் வாழ்வோம் பிணைந்து!

முத்தழகியும் இந்தி எதிர்ப்பில் சிறை சென்ருள், ஒராண்டுக் கடுங்காவலில் இவள் மெல்லுடல் நலிந்தது: நோய்வாய்ப் பட்டுச் சிறையிலேயே இறந்தாள். இவளிறந்தாள் எனக் கேட்டு முத்தனும் இறந்தான். ஒரே கல்லறையில் இருவரும் துஞ்சினர். அக் கல்லறையின் முன் உள் ள நடுகல்லில் பொறித்திருக்கும் வரிகள் இவை

'தங்காதல் மேலாய்த் தனித்தமிழைக் காதலித்தோம்! பொங்குணர்வால் வன்மைச் சிறைபுகுந்தோம்!

- வெஞ்சிறையில் நோயின்வாய்ப்பட்டோம்! உடலம் நொடிந்திறந்தோம்! நாயின்வாய்ப் (பட்டாற்போல் நந்தமிழும் இந்தியினல் நாளும் சிதைந்தொழியும் நற்றமிழர் பார்த்திருப்பார் வாளும் மழுங்கியதோ? வன்மறமும் சாம்பியதோ?

108