பக்கம்:பாவியக் கொத்து.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குரை காதை

முன்னுரை. (தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து மாணவர்கள் கி ளர் க் .ெ த ழு க் த எழுச்சிப் போராட்டம் 1965-இல் நடைபெற்றது. அதற்கு முன்புே எழுதியது இப் பாட்டு. பக்தவத்சலம்’ என்னும் ஆரிய அடிமை அக்கால் தமிழகத்தின் முதலமைச்சாய் இருந்தது. அதன் .ெ கா டி ய வல்லாண்மைக்கு இருநூற்றுக்கும் மேலான மாணவர்களும் பொதுமக்களும் பலியாயினர். மொழியடிப்படை தழுவிய தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் முதல் எழுச்சி அது. அதல்ை இப்பாவித்யதுள் சூடு கிறைந்திருத்தல் இயல் பானது.

இப் பாவியத்தலைவனை வேல்மார்பனைப் போன்று விறல்ோர் ஆயிரக் கணக்கானவர் இத் தமிழ் மண்ணில் எழுச்சி பெறுகையில்தான் 'தமிழக விடுதலைப் போர் முற்றுப்பெறும். அவ்வுணர்வில் கிளர்ந்தெழச் செய்யும் வல்லமை வாய்ந்தது இப்பாவியம். ஆங்காங்கே இஃது ஓரங்க நாடகமாக கடிக்கப் பெறினும் பயன் மிகுதியாகும். உணர்வும் துடிப்பும் உள்ளவர்கள் அவ் வழிகளில் முயற்சி செய்யலாம். இ க் தி யெதிர்ப்புக் காலங்களில் எழுச்சியுற்ற பலரும் உணர்வு மாறித் திறம்பிய இக்கால் இப்பாவியமும், நாடக கடப்பும் பெரிய கிளர்ச்சிகளை உண்டாக்க உதவுவன.)