பக்கம்:பாவியக் கொத்து.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குரை காதை (1964)

காட்சியும் கருத்தும் (வேல்மார்பன் என்னும் விறலோன் தமிழகத்தில் கால்கோளும் இந்திக் கடாவைத் துணிந்தெதிர்த்தான்; ஆகையில்ை ஆள்வோர் அவனைச் சிறைப்பிடித்துச் சாகும் படியடித்தும், சகாமல் நீர்வார்த்தும், நெஞ்சில் உதைத்தும் நினைவழிக்க மாட்டாமல், எஞ்சி யிருந்த உயிரோ டவனுடலைத் துக்கி, அற மன்றத்தில் தொப்பென்று போட்டார்கள். தாக்குண்ட வேங்கை தணல்கக்கப் பேசுகின்ற காட்சியினைக் காணக் கணக்கற்ருேர் வந்திருந்தே, ஆட்சி உரைக்கும் அறத்தைச் செவிமடுப்பர்! முன்னர் அரசினரின் சார்பில் வழக்காடும்' தன்னுணர்வு மாண்ட தமிழ வழக்குரைஞர் வேல்மார்பன் தன்னின் வழக்கை விரித்துரைத்தே,

  1. 1 1