பக்கம்:பாவியக் கொத்து.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குரை. காதை

வடக்கில் சீனன் வரம்பு மீறலை அடக்கிடற் கில்லை; அடுத்துக் கெடுக்கும் பாக்கித் தானின் பகையும் வளர்ந்தது; 40 போக்கிலி! உன்னுல் உட்பகை புகைந்தது. பிரிவினை பற்றி நினைக்கவும் பேசவும் உரிமை உனக்கில; ஒருபெரு நிலத்துள் தனித்தனி ஆட்சி தந்திடற் கில்லை; எனைத்தனி யாக் விடுகென் றியம்பினும் உனேத்தனி விட்டிட அரசு ஒப்பாது: தினைத்துணை மண்ணும் இந்தியா வென்னும் பெருநிலத் தின்று பிரித்திடற் கில்லை! உரிமை கேட்ட்னே, அதுபெருங் குற்றம்! நாட்டின் அமைதியைக் குலைத்ததும் மக்களைக் 50 கூட்டி அவர்தமைத் தூண்டலும் குற்றமே! ஆட்சிக் கிரண்டகம் புரிந்தன; ஆகலின் மீட்சி உனக்கிலை; முடிவாய் நின்பால் விளுக்கள் சிற்சில வினவுவேன்; பிரிவினைக் களுக்காண் பார்க்கவை கண்களைத் திறக்கும்! உரிமை உரிம்ை எனவுரைத் தாயே குரல்மங் கிடக் கூக் குரலிட் டாயே, எந்த உரிமையை இழந்தனை விரைந்துசொல்?

(வழக்கு மன்றத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போயிற்று. காவலர்கள் அடிக்கொருவர் நின்று கூட்டத்தைக் கட்டுப் படுத்துகின்றனர். வழக் குரைஞர் கேட்ட கேள்விகளுக்கு வேல்மார்பனின் விடையைக் கேட்க மக்கள் ஆவளுடனிருந்தனர். வேல்மார்பன் பேசி னன். அவன் இடிக்குரல் வழக்குமன்றச் சுவர்களில் பட்டு எதிரொலித்தது.)

3