பக்கம்:பாவியக் கொத்து.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

வேல்மார்பன்:

{{ {

மூச்சு முட்டப் பேசிவிட் டீர்கள்! ஆச்சு:இனி என்னுயிர் அரைநா ழிகைதான்! 60 இவ்விடைப் பொழுதில் ஆகிலும் என்றன் செவ்விய கருத்தினைச் சிறப்புறக் கூறுவேன்; அறமன்றம் கேட்க, அறவோர் கேட்க! மறத்தமிழ் மக்கள் மறவாது கேட்க! உலகம் கேட்க: உயர்ந்த பெருமைகள் இலவாகிக் கணவனை இழந்த ஒருத்தியாய்த் தவிக்கும் என்றன். தமிழகம் கேட்க! புவிக்குள் இவ்வுரை பொன்ரு தாகுக!

'எந்த உரிமையை இழந்தனை” என்றீர்! எந்த உரிமையை எனக்குத் தந்தீர்? 70 உணர்ந்து பேசிய கருத்தினை ஒவ்வாது கொணர்ந்து நிறுத்தினர் அறங்கூர் அவையம்! இச்செயல் ஒன்றே என்றன் கருத்தினை அச்சம் இலாமல் உரைக்கும் உரிமையை எடுத்தது என்பேன்! இல்லை.என் பீரா? தடுத்தது பேச்செனின் செயற்குத்தாழ்ப் பாளே! வாயில் அமிழ்தும் வளர்கலேயும் ஊட்டிய தாயின் மொழிக்கே தடைச்சுவர் வைத்தீர்! இழவு வீட்டில் இடும்ஒப் பாரிபோல் அழுகை இந்தியை அரசனை ஏற்றினீர்! 80

மொழிதரு உரிமையே முதன்மையா யிருக்கக் கழியை இழந்த கண்ணிலார் போல எங்களே ஆக்கிட இந்தியை நுழைப்பீர்! வெங்கொடும் புண்ணில் வேல்நுழைத் தல்போல்