பக்கம்:பாவியக் கொத்து.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குரை காதை

இந்தி சுட்ட புண்ணில் எரிதரும் வந்தே மாதரம் நஞ்சினை வார்த்தீர்;

வந்தே மாதரம்' எனின், தாய் வாழ்க’ என்பது பொருளெனின், எவர்தாய் வாழ்வது?

எம்தாய் நோஞ்சல்; இருமலால் சாகையில் தும்தாய் பற்றி எமக்கென்ன கவலை? 90 புதுமை எவர்க்கும் பொதுமை அன்ருே?

இதுதவ றப்பனே, எல்லார் தாய்களும் ஒன்றுதான்' என்றே உறைக்கின் lரா? நன்றுதான்; முதலில் நலிவுறும் எந்தாய் வாடிக் கிடக்கும் நிலைவகை செய்க! தேடக் கிடக்கும் ஒற்றுமை என்பது தெருவில் கிடக்கும் தேய்ந்த செருப்பா?

ஒருவர்க் கொருவர் உதவுதல் அன்ருே. பெருமை ஒற்றுமை பேணி வளர்க்கும்! எந்தமிழ் அழித்தே இந்தியை நுழைப்பது, 100 எந்தாய் பாடைக் கேற்றி, நும் தாயை அரியணை ஏற்றல் ஆகா தோ? இதைப் புரிதற்கு நீரென் உரிமை படைத்தீர்? இத்தகு உரிமை எங்கட் கெம்தாட்டில் முத்தமிழ் வளர்த்திட மட்டும் இல்லையா? எந்த உரிமையால் இந்தியைக் கொணர்விரோ, அந்த உரிமையால் அதனை எதிர்ப்போம்! நுஞ்செயல் மட்டும் உரிமையால் நிகழ்ந்ததோ: எஞ்செயல் மட்டும் உரிமை இழந்ததோ?

வெள்ளைக் காரனை எதிர்த்துப் பெற்ற 11 நொள்ளை உரிமை இதுவென் றுரைப்பின்