பக்கம்:பாவியக் கொத்து.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

நீங்கள் அவனை எதிர்த்து நிற்கையில் நாங்கள் மட்டும் நண்டா பிடித்தோம் ? உம்மொடு சேர்ந்தோம்; உம்மினும் பொருதினேம்; உம்மின் முழக்கினும் உயர்முழக் கிட்டோம் !

மொழியின் உரிமை நெஞ்சில் முளைப்பது ! மொழியின் உரிமை உணர்வில் முகிழ்ப்பது : தாய்மொழி உரிமை அற்றவர் பிறரை நாய்போல் நத்தி வாழ்தலே நடப்பு ஒரிரு நாய்கள் உம் பின் வரலாம்; 13s) ஈரோர் எலும்புத் துண்டுகள் எடுக்கலாம் ! அதற்கெனப் பிறரையும் அவர்போல் நினைப்பதா? புதுக்கினேன் உணர்வெனப் புகன்றீர்; உணர்வு புதுக்கிடப் பித்தளை, செம்பா என்ன ? நல்லுணர் வென்றும் சாம்புவ தில்லை ! நல்லுணர் வதுதான் நாடி நரம்பினில் ஒடிய வாறே மாந்தரை உய்ப்பது ! நீடுநல் உணர்விலார் நீர்மையர்: அவரால் கேடுகள் விளையலாம்; நன்மைகள் கினையா!

எந்தமிழ் மொழியில் நல்லுணர் வியற்கை ! 130

1 16

அந்த உணர்வுதான் தமிழினம் அழியாது இன்று காறும் இருந்து காப்பது ! பொன்றிய உரோம, கிரேக்கம் முதலிய நாடுகள் பலவும், நல்லினம் பலவும் ஒடு நீரிற் கரைந்த உப்பென அழிந்த காரணம் அவ்வுணர் வின்மைதான் ! மொழியே உணர்வினை முழுதும் காப்பது ! இந்தநல் உணர்வோட்டிய்ல்வதால் அன்ருே செந்தமிழ் தானும் செழித்து நிற்பது.!