பக்கம்:பாவியக் கொத்து.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குரை காதை

உணர்வால் மொழியும், மொழியால் அறிவும் I40 புணரும் அறிவால் வாழ்வெனும் பயனும் எல்லா உயிர்க்கும் பொதுவென உணர்க! கல்லா மாந்தர் மொழிக்கெனக் கவலார்: அவரே இன்றை ஆட்சியில் இருப்பவர்; இவர்தம் மால்தான் எம்மோர் நொடிவது ! இன்றை நிகழ்ச்சியே இறுதி அன்று; பின்றை நடப்பவை பின்னுளார் அறிவர் !

ஒருவனின் உரிமையை-உயிரைப் பறிப்பதால் உரிம்ை உணர்விங் கொழியுமா என்ன ? காலைக் கதிரவன் கடும்பகல் கொதிப்பதும் 159 மாலைபோய் இருளில் மாய்வதும் போலப் பல்வகை ஆட்சி உலகினில் படர்ந்து சில்நாள் இருப்பதும் சிறப்பதும் அழிவதும் இயற்கை மக்கட் கிட்ட சட்டம் ! மயற்கை வேண்டா; மக்களின் உணர்வை. உணர்வில் முகிழ்த்த மொழியின் உரிமையை இனரிதழ் போலக் கிள்ளி எடுப்பது அரசினர் மடமையென் றறிக ! உரிமை முரசைக் கிழித்தால் முழக்கம் நிற்குமா ? உள்ள முழக்கம் ஒயாப் பெருங்கடல் 160 எள்ளி அடக்குதல் ஆட்சிக்கு இறுதி.

அ. சா. வழக்குரைஞ்ர்:

துடுக்குத் தனமாய்ப் பற்பல சாற்றிய்ை ! அடக்குநின் பேச்சை! அறியா தவன், நீ, உரிமை உரிமை என்றே உரைத் தாய் !

உரிமை பெரிதர், வாழ்க்கை உயர்ந்ததா?

1 if