பக்கம்:பாவியக் கொத்து.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவிபக்கொத்து

வேல்மார்பன்:

உரிமை மணக்கும் வாழ்வே உயர்ந்தது :

அ. சா. வழக்குரைஞர்:

உலகமும் அதனுள் உள்ள பொருள்களும் உலக மக்கள் யாவர்க்கும் உரிய, அப்படி இருக்கையில் அறியார் சிலரொ(டு) எப்படி என்நிலம் இதுவெனக் கேட்கலாம் ? | 73

வேல்மார்பன்:

  1. 18

உரிமை என்பது நீங்கள் உரைக்கும். உலகமும் அன்று; பொருள்களும் அல்ல. ! அவையெலாம் உடைமை அவைஒரு வற்கென் றெவரும் விளம்பார் 1 இனுஞ்சில நாட்களில் 'நாடும் நிலமும், நகரும், ஊரும் வீடும், வித்தும், அவைதரு விளைவும் எல்லாப் பொருள்களும் எல்லாப் பயன்களும் எல்லார்க்கு மாகும்" எனும்பொது உடைமை வந்த்ே தீரும் வகையினை அறிவேன்! முந்திடும் அந்நாள் விரைவினில் முகிழ்க்க F&G என்னல் முடிந்த தொண்டினை ஏற்பேன் :

இந்நாள் உரைக்கும் உரிமையில் தில்லை.

புறத்தே ஆகும் பொருள்களே உடைமை !

அறத்த தாகி, அகத்துள உணர்வையும்,

அவ்வுணர் வாலே அலரும் கருத்தையும், இவ்வுல கோர்க்கிங் கியம்பிடும் உரிமை ஒன்றே நானிங் குரைக்க வருவது: இன்றிவ் வுரிமைக் கிழுக்கு வந்தது.