பக்கம்:பாவியக் கொத்து.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

இந்தியைப் படிப்பதால் எந்தோள் மேலே குந்தி எங்களைக் குதிரை யோட்டுவீர்; வாய்ப்பூட் டேற்று வழிவழி அடிமையாய்ப் பேய்ப்பணி செய்ய எங்களைப் பிணிக்குவீர்! குடுமியைப் பிடித்துக் கொடுமைகள் புரிவீர், х 340 அடிமையாய் உங்களின் அடிதொழச் செய்வீர் இவற்றைத் தவிர இந்தியால் விளைவதென் ?

(மக்களைப் பார்த்து)

தவற்றைப் புரியும் தமிழக மக்களே ! செவிமடுக் கின்ற சிறுத்தைப் புலிகளே ! புவியில் தமிழினம் வடவரால் பொன்றிடும் ! அடிமை வாழ்க்கைக் காளா காதீர் ! விடிவே இல்லா இருளில் விழாதீர் !

வழக்குரைஞர்:

(அறமன்ற நடுவரைப் பார்த்து)

இப்பெரும் புரட்சிக் காரனை இக்கால் தப்பவிட் டாலோ தமிழர் யாவரும் 250 கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போவர்; எட்டுணே யும்நம் இத்திய நாட்டில் ஒற்றுமைப் பாடோ உருப்படா திவல்ை ! சற்றும் கனிவிலாது ஐயனே, இவற்குத் து.ாக்குத் தண்டம் என்றே நாக்கு குழருது நவிலவேண் டுவனே!

அறமன்ற நடுவர்:

இந்திய நாட்டுக் கிரண்டகம் செய்தயிம் மந்தியைத் தூக்கில் மாட்டுக. உடனே !

121