பக்கம்:பாவியக் கொத்து.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ممسه يس 8م مصممه

முதலிரவு!... (முதலிரவு' என்ற பொருட்சொல், அத்திப்பூ" எனும் இப் பாவியக் கதையுள், தலைநாள் இரவு (வரி: 23; ...39-40), அணியிரா (வரி: 85), முதலிரா (வரி: 88). தனியிரா (வரி: 70), "தலையிரா (வரி: 72), நல்விரா (வரி: 76i என்றவாறு தனித்தனி யழகொளிர் சொற்களால் புனேவுசெய்து காட்டப் பெறுகின்றது:)

முதலிரவுக்கென்று ஏற்பாடு செய்யப் பெற்றிருந்த நீல விளக்கொளி நிலவிய நல்லறையில், கோலவெண்திரைக் குள்ளிருந்த மென்மலர்க் குவியல் மிசைபரப்பப் பெற்றிருந்த உயர்காற்கட்டிலில், பாவியத்தலைவன், தலைவி வருகைக்காகக் கதவிடுக்கினிலே கண்களே அனுப்பி எதிர்பார்த்துத் துடித்துக் கிடக்கின்ருன் !

மல்லிகை நறுமணம் மூக்கை மணக்கிறது! மெல்லிசை வளையல்களின் நல்லிசை கேட்கிறது! தலைவன் விழிகளைத் திறந்து நோக்குகின்ருன்! வி தி ர் ப் புற நடுங்கியவாறு கதவொடு கதவாகக் கதைத் தலைவி உள்வந்து நிற்கின்ருள்! விண்ணில் பறக்கவும் விசும்பில் தூங்கவும், உறவெதிர் கொள்ளவும் உயிர் துடித்தவாறு எதிர்பார்த்திருந்த தலைவ னுக்கு தலைவியின் விதிர்ப்பும் நடுக்கமும் கலந்து கலங்கிய தோற்றக் காட்சியால் பதைபதைப்பு ஏற்படுகின்றது.

அந்த நேரத்தில், அந்த அறையில், அந்தச் சூழலில் ஒர் அமைதி அமைந்திருந்திருக்குமல்லவா? (ஒரு நிசப்தம்' அந்த அமைதியை ஆசிரியர் சுட்டும் அழகைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்தாலும், உள்ளமெல்லாம் உகளிக் குதிக் கின்றது.!

அங்கிருந்த அமைதியை ஆசிரியர் இப்படிச் சுட்டுகின்ருர்!

'அமைதி! அமைதி! அசைவிலா அமைதி ! இமையின் துடிப்பும் எனக்குக் கேட்டது!’

(ப: 16: வரி: 153-1541 இவ்வகையாகக் கருத்தைத் து லக் கும் சான்றுமுறை, அரிதினும் அரிதானதாகும் என்பதை ஒப்பீட்டு நலங்கண்டு உணர்ந்து சுவைக்கும் இலக்கியத் தோயன் எவனும் ஆமோதி