பக்கம்:பாவியக் கொத்து.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந் நாளில், முத்தப்பன்' என்னும் தலைவனின் நண்பன் தொடர்வண்டியில் வருவது பற்றிய தொலைவரி வருகின்றது. அவனே அங்கு தலைவன் சென்று வரவேற்கின்ருன். இருவரும் ஆங்கொரு சோலைக்குச் சென்றமர்ந்து உரையாடிக் கொண் டிருக்கிரு.ர்கள்! திருமணத்தைப் பற்றி முத்தப்பன் கேட்கி முன் தலைவன் அழுகின்ருன்!-நடந்த நிகழ்ச்சிகளையும், கயல் விழி கூறிய அதிர்ச்சியுரைகளையும் தலைவன் முத்தப்பனிடம் கூறுகின்ருன்! நான்தான் செய்தேன் என்று, அவளிடம் கூறினேன்’ என்று தலைவன் சொல்லவும், உன்னவளை - நீ முன் உருக்குலைத்தது உண்மையோ?” என்று உள்ளங்குமுறி முத்தப்பன் கேட்கிருன்.

'அவளை இறக்காமல் காக்கத்தான், நான் பழி ைய ஏற்றேன், என்று த ல வ ன் அழுகின்ருன். முத்தப்பன் எழுந்து, நின்ற நெடுமரம்போல் நீள விழுந்து தலைவனிடம் அழுது, "அக் கொடிய செயலைச் செய்தவன் நானே!’ என் கின்ருன்! தன்னை மன்னிக்கச் சொல்லி மன்ருடுகின்ருன்! "பொறுத்தேன் இறப்பினை என்றும் அ த னை மறந்தேன், இனியுன்னை மன்னித்தேன்; வா போவோம், வீட்டுக்கு” என்று முத்தப்பனைத் தலைவன் அழைக்கின்ருன். 'குடியழித்த இந்தக் கொடியவனை உதறிவிடு' என்று கண்ணிர் மல்கக் கூறிவிட்டு, முத்தப்பன் பிரிந்து போகின்ருன்!

தலைவன் வீடுவந்து சேர்ந்து, அவளிடம் ம கி ழ் ச் சி நிரம்பியவனாகவே வாழ்கின்ருன்! இதுவே கதையமைப்பு!

இக் கதையின் தீர்வாகத் தாம் சொல்ல வந்த முடிவுக் கருத்து ஒன் ைற, முத்தப்பன் வாயிலாகவே ஓரிடத்தில் ஆசிரியர் சுட்டி விடுகின்ருர்!

தித்தித்த நெஞ்சுணர்வால் தீயதையும் மன்னிப்போர் அத்திப்பூப் போல அறியார்க்கு அறியாராய் வல்லார் ஒரு சிலரும் வாழ்கின்ருர் இவ்வுலகில்! அல்லார் அவரை அறிவதில்லை :

(பக். 33: வரி: 564.5671