பக்கம்:பாவியக் கொத்து.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11-10) நாம் பிறந்த நாட்டிற்கும்

செந்தமிழ்க்கும் கேடுவந்தால் தாம்பறுந்த காளேயென உள்ளம் தழலாதோ ? கொஞ்சும் தமிழின் குரல்வளைக்குத் தீதென்ருல் நெஞ்சம் துடிக்காதோ? கூனும் நிமிராதோ ? போக்கற்ற இந்தி, தமிழைப் புதைப்பதெனில் தாக்குற்ற செந்தமிழர், தக்கைகளா பார்த்திருக்க?

(பக் 105:15-20)

(1-11) "அத்தான்! நான் ஒன்றுரைப்பேன் ;

அன்னைத் தமிழ்க்கு உடலம் செத்துமடிந் தீர் எனினும் செம்மாந்து நான் சாவேன் !'

(பக் 05: 53.54)

11-12) "செந்தமிழ்க்கு நானும்

எனக்குத் தமிழ் அமிழ்தும் சொந்தம் அத்தான்! சொந்தம் ! உலகளவு சொந்தமென்பேன் ! நானும் தமிழச்சி ! என்குடியும் தொல்குடியே!”

(பக்: 107; 53.65)

(1-13) "எந்த உரிமையால் இந்தியைக் கொணர்விரோ,

அந்த உரிமையால்அதனை எதிர்ப்போம் so

(பக் ; 115; 106.107)

(1-14) "வெள்ளைக் காரனே எதிர்த்துப் பெற்ற

நொள்ளே உரிமை இதுவென்று உரைப்பின் நீங்கள் அவனை எதிர்த்து நிற்கையில் தாங்கள் மட்டும் நண்டா பிடித்தோம்!”

(பக் 115.115; 110.13)

(1.15) "எந்தமிழ் மொழியில் நல்லுணர்வு இயற்கை !

அந்த உணர்வுதான் தமிழினம் அழியாது இன்று காறும் இருந்து காப்பது”

(பக்: 116; 130.132)