பக்கம்:பாவியக் கொத்து.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سمه ليکي : سه

11-16) "அருள் அறம் மறம் சேர் அருந்தமிழகமே இருளில் வீழ்ந்தனை! என்றெழு வாபேர் ? . புகழ்செய் புலவோர் புரந்தசெந் தமிழே இகழ்படச் சாம்பினை என்று அலர் வாயோ ? பழிபடா வாழ்க்கைப் பைந்தமிழ் மகனே ! இழிபடக் கிடந்தனே ! என்றெழு வாயோ ?

. (பக் 122: 258.263 )

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், தமிழர்கள் தம் மொழி இன நாட்டுணர்வில் மழுங்கலுற்றுத் தேய்ந்திழியும் மானத் தைப் புதுக்கிக் கொள்ளவும், தம் வாழ்வியலிடையே பல்வேறு அகப்புறத் தாக்கங்களால் தளர்ந்து சரிகின்ற பண்பாட்டை யும் நாகரிகத்தையும் திறமுறுக்கேற்றிச் செப்பஞ் செய்து கொண்டு நெகிழாது நின்று நேர்வழியைக் கடைப்பிடித்து நடையிட்டு மு ன் னே ற வு ம், தன்னைப் பயணுக்கிக்கொள்ள வேண்டியே, இப் பாவியக் கொத்து இலங்குகின்றது என்பது தெளியத் துலங்குகின்றது !

யாக்கப் பெற்ற பாக்களால், கோக்கப்பெற்ற இப் பாவி யத்துள் வார்க்கப் பெற்ற ஆக்கங்கள், நோக்கப் பெறுகையில் இவை மட்டுமே அல்ல!

இன்னும் இன்னும் பன்னுாறுள . . . நுழைந்து சுவைத்து நுண்பொருள் தோய்கவே !

அன்பன், ப. அரு ளி.