பக்கம்:பாவியக் கொத்து.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பதிப்பு முன்னுரை !

ஏறத்தாழ இருபத்துமூன்று ஆண்டுகளுக்குப்பின் இவ் விரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. முதல் பதிப்பு நூல்கள் தீர்ந்து ஏறத்தாழ எட்டாண்டுகள் ஆயினவெனினும் போதிய பொருள் வலிவின்மையால், இதன் மறுபதிப்பைத் தேவை கருதியும் உடனே வெளியிட முடியவில்லை. பி ன் ன ர் அச்சடிப்புத் தொடங்கியும் மெதுமெதுவாக ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குப் பின்னரே இதை வெளிக் கொணர முடிகிறது.

இக் காலத்தில் தமிழ் ஆர்வம் ஓரளவு மிகுந்து வளர்ந்து வருகின்றதெனினும், தமிழறிவு அந்த அளவுக்கு இணைந்து வளர்வதாகக் கூறமுடியாது. -

ஒருபுறம் தமிழ் அறிவும் உணர்வும் ஐந்து விழுக்காடு வள்ர்ச்சிபெற்ருல், எதிரான நி இல யி ல் தமிழ்க்கெடுப்பு முயற்சிகள் ஐம்பது விழுக்காடு ஏ ற் ற ம் பெற்று, அந்த வளர்ச்சியைக் குறைத்து வருகின்றன.

எனவே, தமிழ்மொழி வள் ர் ச் சி நிலையில் பெரிய போராட்டமே நிகழ்த்த வேண்டியுள்ளது.

தமிழ்மொழியை முன்னேற்ற விரும்புபவர்க்கு ஆதரவும் இல்லை; ஆக்கமும் இல்லை.

இந்நிலையில் என்ன செய்வது ?

அடுத்து, இக்காலப் பாட ல் இலக்கியம் தொடர்பாக ஒருசில கூற வேண்டியுள்ளது.

மரபுப் பாடல்களுக்கும், உரைப்பா எ ன் னு ம் புதுப்பா (அதைக்கூட புதுப்பா என்று சொல்வதில்லை; புதுக்கவிதை என்றே கூறுகிருர்கள்.) வகைகளுக்கும் உள் ள உயர்வு சிறப்பை யாரும் உணரவில்லே.

அறிவு மேல்ோட்டமாகவே கொ ரிக்கப்படுகிறது

யாப்பேதேவையில்லை என்கின்றனர். யாப்பு இல்லாமற் போளுல் எப்படிப் ப்ாட்டு என்பது?

பாடுதற்கு உரிய பண்ணுக்கு உரியசந்த அமைப்போடு கூடியதுதான்ே ப்ர்ட்ல்ாயிருக்க முடியும்.