பக்கம்:பாவியக் கொத்து.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

→拉一áš一

மொழி மரம் என்ருல், இலக்கியங்கள் அ த ன் வேர். மரம் கோடையில் பட்டுப்போவது போ ல் தோன்றிலுைம், அதன் வேர் என்றும் உள்ளதால், அடுத்து வரும் மழைக் காலத்தில் அது தழைத்து விடுவதுபோல், அழியாத இலக்கி யங்கள் உள்ளவரை மொழி அழியாது.

அதேபோல் மொழி உள்ளவரை இலக்கியமும் அழியப் போவதில்லை.

மொழிக்கும் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு இது! 'பாவியக் கொத்து’ எனும் இந்நூல் தமிழில் புதுவதர்க மலர்ந்து வரும் சிறுகதை இலக்கியம் போலும், சிறுபாவிய

இலக்கிய வகையைச் சேர்ந்தது.

சிறுகதை உரைநடை சிறுபாவியம் பா நடை! இதிலுள்ள சிறுகதைக் கருக்கள் எல்லாம் மனவியல் சான்றவை. படித்தபின் ம ன த் தி ல் அழியாமல் நின்று நிலப்பவை !

ஆயிரம் வகையால் போலியும் பொய்ம்மையும் ஆரவாரக் கூத்துகள் ஆடினுலும், உண்மைகள் வயிரச் சுரங்கங்களாக என்றுமே நிலைத்திருப்பன. அவற்றை அழிக்க யாராலும் முடியாது !

இப் பாவியக் கொத்து அந்த வகை ! இதை இரண்டாம் முறை அச்சிட்டு வெளிக்கொணர்வ தற்குள் அப்பப்பா போதும் போதுமென்ருகிவிட்டது.

வழக்கம்போல் என் மகன் பொழிலனுக்கு இதை வெளிக் கொணர்வதில் நிறைய பங்குண்டு.

உங்கள் ஆதரவை நம்பித்தான் நாங்கள் அனைத்தையும் செய்கிருேம்!

தமிழ்தான் நமக்குத் துணை. சென்னை - 5. {

கன்னி ந.0

s இச் o 16-10-85. பெருஞ்சித்திரளுர்