பக்கம்:பாவியக் கொத்து.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திப்பூ

- முன்னுரை

பிழையே செய்யாதவருக்கிருப்பதைவிடப் பிழை யைச் செய்து, அதற்காக வருந்தித் திருந்துபவ ருக்கு மிகவும் மன வலிவு வேண்டும்; இவரை விடப், பிழை செய்வோரைப் பொறுத்துக் கொள் பவருக்கு மிக்க மனவலிவோடு அருளும் வேண் டும்; இவரினும் பொறுத்துக் கொண்ட பிழையை மறப்பவருக்கு மிகுந்த மனவலிவும், அ ரு ளு ம் தெளிந்த அறிவும் வேண்டும்.

பிழை செய்யாதவர் தம்முடைய வாழ்வைமட்டும் நிலைப்படுத்துகின்ருர்; அதைச் செய்து வருந்தித் திருந்துபவர் பிறர் வாழ்வை நிலைப்படுத்துகின் ருர், பிறர் செய்யும் பிழையைப் பொறுத்துக் கொள்பவரோ, தம் வாழ்வோடு, பிறர்வாழ்வையும் கிலைப்படுத்துகின்ருர். அதனை மறந்து விடுப வரோ, மக்கள் குலத்தையே நிலைப்படுத்துகின்ருர்

பிழை செய்தார், பிழை செய்யப்பட்டார், பிழை யைப் பொறுத்து மறப்பார் ஆகிய மூவர் வாழ்க் கைக் கோணங்களும் ஒரு புள்ளியிற் கூடுமானல் .......... ...... அப்புள்ளியில் எழும்பும் உணர்வு அலைகள் ... ..... .....!!