பக்கம்:பாவியக் கொத்து.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அத்திப் பூ: (1959)

1

முழுநிலா வெழுந்தது மூச்சிலும், நெஞ்சிலும் எழுநிலா முகத்தின் எழிற்கொடி-என்றன் கையைத் தொட்டுக் காலையில் மணந்த பைங்கிளி உருவே பரவி யிருந்தது!

முற்றத் திருந்தேன்; முன்னுள வாயிலில் உற்ற உறவினர் ஒயாப் பேச்சும், சிறுவர் முழக்கிய சிரிப்பும் ஒலமும், குறுநடைக் குழவிகள் குரலெழு இசையும் விரும்பா விடினும் விழுந்தன செவிகளில்! அரும்பா மலர்கள் காற்றிற் கசைவதாய் 10 விளையாட் டயர்ந்தனர் விளையாச் சிறுமியர்! களியாட் டாழ்ந்தனர் காளையர் ஒருபுறம்!

} {}