பக்கம்:பாவியக் கொத்து.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

அகன்ற உள்ளறை அடைத்துள பெண்டிர் புகன்ற பகடியும், புகழ்ச்சியும், இகழ்ச்சியும் தந்தம் திருமணத் தன்று நடந்ததும், தந்தங் கணவரைத் தாமுதற் கண்டதும், பூனையா யிருந்தவள் புலிபோல் வளர்ந்ததும், ஆனையா யிருந்தவள் அருகாய் இளைத்ததும், தந்திரு மணங்களின் தாயர் வரிசையும், § {} வந்திருந் தார்.பால் வந்த பரிசிலும், தூங்குங் காலையில் தொலைத்த தொங்கலும், ஆங்கொரு பெண்ணதை அடிமடி யொளித்ததும்,

தலைநாள் இரவில் தனக்குக் கணவன், விலையிலா தீந்த விரலணி வீழ்ந்ததும், முதல்நாள் அவன்றன் முன்வர அஞ்சிக் கதவிடுக் கில் அவள் கணவனைக் கண்டதும், இற்றையோ அவள்முன் இவன்வர அஞ்சி ஒற்றைக் காலால் ஒருநூறு கரணம் 'இடு”எனும் முன்னம் எண்ணுநீ' என்பதும், விடுவிடு' எனினும் விடாமல் தொடர்வதும், 36 'பிள்ளையே வேண்டா? வென்று பினங்கியள் உள்ளும் புறமும் ஒன்பதைப் பெற்றுப் புடலங் காயாய்ப் போனதும், பூசுணை உடலுடை ஒருத்தி ஒன்றுக் கேங்கலும் இன்ன பற்பல இளமை நிகழ்ச்சிகள் அன்னவர் பேச்சில் அடிபட் டாலும், என்செவி என்னவோ ஏறவே இல்லை; இன்மொழி ஒருத்திசொற் கேங்கின. அவையே!

இரவு நடத்திட இருக்கும் தலைநாள் இரவு நிகழ்ச்சியில் என்மனம் ஒன்றிச் 49