பக்கம்:பாவியக் கொத்து.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3

பாவியக்கொத்து

உண்டு உண்டு) உவக்கும் உவகை முதலிரா! மேவுகலை எல்லாம் மேலன்று; உணர்வைத் துரவுகலை மேலெனத் தோற்றும் தனியிரா! 7 ዐ ஒற்றைத் தனியனய் உலகத் திருந்தவன் கற்றைக் குழலொடு கலக்கும் தலையிரா! பூக்கும் பூவையள் புலனேந் தின்பம் தேக்கும் இன்பத் தேனிரா இஃதாம்; உள்ளம் என்பதும் உயிர்,உடல் என்பதும் விள்ளியுங் கட்கு விளக்கும் நல்லிரா! மேவும் ஈருயிர் மின்னிப் பொருந்தி: மூவுயிர் ஆகும் முதலிரா! இஃதாம்! இவ்விரா உங்கட்(கு) இன்பம் வழங்குக! கவ்விய இருளும் களிப்பை நல்குக: 覆每 இன்று முளைத்த எழில்நிலா வானில் நின்று பொழிக நீடிய இன்பமே” என்று வாழ்த்தினர் இனிய தமிழில்! நன்றென நவின்றேன்; நகர்ந்தனர்; தனித்தேன்.

அன்னை வந்தார்: "அன்புறு மகனே! முன்னை ஈன்று மூழ்கிய இன்பம் குன்றள வாயின் கோதை ஒருத்தியோ டின்றுனைச் சேர்த்த இன்டமோ, வானினும் பெரிதே வேறென் பேசுவேன்? நீ எனக்(கு) அரிதாய்க் கிடைத்த அருமைச் செல்வம்! § {} என்னை மறவா திருப்பாய் தம்பி; உன் அன்னையின் ஆவல் அவ்வள வேதான்’என்று கூறினர்; இருகை யாலும் குன்றுதோள் நீவிக் குறுநுதல் தடவி உச்சித் தலையில் உள்ளங் குளிர இச்சிச் சென்றே ஏழெட்டு முத்தம்