பக்கம்:பாவியக் கொத்து.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திப்பூ

பொழிந்தார்; அவர்தம் பொன்முகம் நோக்கினேன் வழிந்தது கண்ணிர் வாயெழ வில்லை; பொன்னடி வீழ்ந்தேன்; பூங்கையால் தடுத்தார். அன்னையின் அன்பை அளவிலா துண்கையில் } {} {} அன்னையைத் தந்தை அழைத்தார்; அவரும் என்னை விடுத்தே உள்ளறை ஏகினர்.

நால்வகைப் பேச்சும் நடந்த தாயினும் சேல்விழி நினைவிலென் நெஞ்சம் சுழன்றது! காலையிற் கண்ட கவின்நிலா முகத்திலும் சேலினே யொத்த விழியிலும், சிரிப்பிலும், மெல்லிய தோளிலும், மென்விரல் நெளிவிலும், ஒல்லி இடையிலும், ஒசிந்த நடையிலும், மூழ்கி யிருக்கையில் முதியவர் ஒருவர் வாழ்க மனையறம் என்றே வாழ்த்தி I 1 {} எழுங்கள் தம்பி!” என்ருர்; அந்தக் கொழுந் தமிழ் நெஞ்சைக் குளிர்மை செய்ததும் எழுந்தது நெஞ்சம்; எழுந்தன கால்கள்; எழுந்தது வாழ்க்கை; எழுந்தது நல்லறம்; எழுந்தேன். நடந்தேன்; எழிலறை போகி விழுந்தேன் படுக்கையில், விண்ணில் பறக்கவே!