பக்கம்:பாவியக் கொத்து.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

நீல விளக்கொளி நிலவிய நல்லறை: கோல வெண்திரை! மென்மலர்க் குவியல்: உயர் காற் கட்டில் ஒண்பூ விரிப்பு: மயர் வறு நறுங்கனி மனமெழு பூம்புகை! | 20 தேம்பூங் கட்டி துரவிய தீம்பால்! தாமரை யிதழ்போல் தளிர்வெள் எளிலைகாய்! வெள்ளிச் செம்பில் விடாய்க்கென நறுநீர்! அள்ளிப் பூசுதற்(கு) ஆரக் குழைவு! வெயர்வைத் துண்டு வெட்டிவேர் விசிறி! அயர்வற உண்னற்(கு) ஆநெய்ப் பண்ணியம்! எனப்பல வாக இருந்தன.

-இவற்றில் நினைப்பில தாக நெடுங்கட் பிறைநுதற் பாவையின் வரவெதிர் பார்த்தது தெஞ்சம்! பூவையின் மணிநடை பொதிந்தன செவிகள்! 130 நுண்ணிடை வருவழி நோக்கின கண்கள்! பண்மொழிக் குரைதரப் பதைத்தது கடிவாய்! துவரிதழ் கவ்வத் துடித்தன இதழ்கள் இவர்கிளிக் கிடந்தர எழுந்தன தோள்கள்! புறவெதிர் கொள்ளப் பறந்தன கால்கள்: உறவெதிர் கொள்ள உயிர்துடித் ததுவே!

துடித்த வல்லுயிர்த் துணுக்கை யடக்கி வடித்த எழிலுரு வந்ததும், அவளொடு முதன்முதற் பேசும் முதற்சொல் ஏது”என