பக்கம்:பாவியக் கொத்து.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திப்பூ

கதவிடுக் கினிலே கண்களை அனுப்பி 14 G எண்ணி இருந்தேன்; இருந்தேன் இறக்குமுன் நண்ணிய பெண்களின் நடையும் சிரிப்பும் கேட்டன; உள்ளம் கிறங்கிய(து) உடலம் ஆட்டமுற்றதே! ஆவல் அடைத்தது: கண்களை மூடினேன்! கலகல வென்று பெண்கள் நகைத்த பெருநகை தேய்ந்து, மல்லிகை நறுமணம் மூக்கை மணந்தது! மெல்லிசை வளையல் நல்லிசை கேட்டது! விழிகளைத் திறந்தேன்! வெதிர்ப்புற நடுங்கிப் பழியிலா ஒவியப் பாவை விளக்குக் 1 5 9 கதவொடு கதவாய் நின்றது கண்டேன்!

பதைபதைத் ததே,என் பழியிலா நெஞ்சம் அமைதி அமைதி!! அசைவிலா அமைதி: இமையின் துடிப்பும் எனக்குக் கேட்டது. வெளிப்புறத் திருந்தவர் வேறுவி டேகினர்1 களிப்போ டெழுந்தேன்! கனத்தேன்; அமர்ந்தேன்; ஒருநொடி தாழ்த்தி உள்ளத் துணிவொடும் பெருமகிழ் வோடும் பின்னும் எழுத்தேன். அந்த மயிலை, அழகுப் பாவையைச் சிந்து கலையெழிற் சேர்ந்த கிளியினை, 16ፀ நெருங்கினேன்; நின்றேன்; நெடுமூச் செறிந்து கருங்குழல் நீவிக் கயல் விழி என்றேன்.

மின்னி யதிர்ந்திட, மேனி குலைந்திட, என்னிலை யழிந்துகொண்டிருக்கையில், ஏந்திழை ஆல்விழு தொன்றங்(கு) அற்றுச் சாய்ந்ததாய்க் கால்விழுந் தலறிஞள். கைகால் பதறிள்ை: