பக்கம்:பாவியக் கொத்து.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? வியக்கொத்து

தெடுந்தரை அறைந்தாள்: நீள்குழற் பிய்த்தான்; படுந்துயர் வுற்ருள்; பதைபதைப் பேற்ருள்; "அத்தான், அத்தான், அத்தான்’ என்றே பித்துரை பயின்ருள்: பீடழித் துயிர்த்தாள்; 夏亨卷

நடுங்கினுள்; நாணினுள்; நான்தொட விலகி ஒடுங்கிள்ை; அடங்கிளுள்; உரையிலா(து) அரற்றினுள்: ‘ஐயகோ என்ருள்; அன்னய் என்ருள்; 'உய்வனே என்ருள்; உலகமே என்ருள்; துடித்தாள்; துவண்டாள்; துயரினுல் தலையில்

அடித்துக் கொண்டாள்; அறைந்துகொண் டாளே!

தரையே பிளந்து தணற்குழம்(பு) எழுந்ததாய் உரையிலா துள்ளம் ஒடுங்கிய(து) எனக்கு!

விண்ணில் பறக்கவும் விசும்பில் தூங்கவும் எண்ணிய எண்ணம் எல்லாம் புதைந்தன. ፫ 8£} துடித்த கைகள் தொடவும் அஞ்சின. அடித்த தென்றலும் அனலெனச் சுட்டதே! அருவி நீராய் அழுதவள் கண்ணிர், பெருகிட யானும் பேச்சிலா துயிர்த்தேன்!

அழுதாள்: அழுதாள்: அயர்விலாது) அழுதாள்: ஒழுகுநீர் உதிர்த்தே உரையிலா(து) அழுதாள்: