பக்கம்:பாவியக் கொத்து.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திப்பூ

18

(வேறு)

உளமிருந்தது; உணர்விருந்தது; அழுதாள்!-அதில்

ஊறுகின்ற நினைவிருந்தது; அழுதாள்! வளமிருந்தது; வனப்பிருந்தது; அழுதாள்'. அதில்

வாழ்க்கை என்ற கனவிருந்தது; அழுதாள்! குளமிருந்தது; நீரிருந்தது; அழுதாள்-அதிற்

குளித்து மூழ்க வழியிருந்தது; அழுதாள்! மளமளவென நீர்வழிந்தது; அழுதாள்!-என்

மடியிருந்தது தரையில் புரண்டே அழுதாள்!

இடமிருந்தது; இரவிருந்தது; அழுதாள்!-நெஞ்சில்

இளமை என்னும் தேனிருந்தது; அழுதாள்! தடமிருந்தது; காவிருந்தது; அழுதாள்!-நாங்கள்

தனிமை என்னும் நினைவிருந்தது; அழுதாள்! உடலிருந்தது; அழகிருந்தது; அழுதாள்!-நாங்கள் ஒன்றிப்போன நிலையிருந்தது; அழுதாள்! குடலிருந்தது! வயிறிருந்தது; அழுதாள்!-நாங்கள்

கூடிமகிழப் பசியிருந்தது அழுதாள்!

காற்றிருந்தது: கணப்பிருந்தது; அழுதாள்-நான்

கணவ னென்ற உறவிருந்தது; அழுதாள்! ஊற்றிருந்தது: மாற்றிருந்தது; அழுதாள்!-என் உள்ளத்தவளின் உறவிருந்தது: அழுதாள்! நேற்றிருந்த நிலையிறந்தது; அழுதாள்!-இனி

நீங்கிடாத பிணைப்பிருந்தது; அழுதாள்! ஏற்றிருந்த பொறுப்பிருந்தது; அழுதாள்i-நான்

இருந்தும் எண்ணி விசித்து விசித்து அழுதாள்!

190

300

21 G