பக்கம்:பாவியக் கொத்து.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

நாழிகை நடந்தது: நள்ளிருள் நேரம். 'வாழிய முதலி.ரா’ என்று வாழ்த்திய நண்பர் முழக்கம் நாணம் தந்தது. பெண்கள் கூடிப் பேசிய பேச்சு நெஞ்சில் ஒலித்ததே! அவர்க்கு நிகழ்ந்த விஞ்சு நிகழ்ச்சியை விஞ்சிய தெனக்கு வந்து வாய்த்த வளமிலாக் காட்சி! அந்தப் பெண்டிர் அனைவரின் கூற்றிலும் 3 # 9 நான்காண் கின்ற நலமிலாக் காட்சிபோல் தோன்றிடக் காணேன்! என்ன தொல்லையோ? என்னை மணந்த ஏந்திழை தனக்கே!

அன்னையைப் பிரியும் ஆருத் துயரோ? முன்பின் உணரா எனக்கு மொய்குழல் தன்புது நலத்தைத் தருவதில் அஞ்சிக் குளிர்முகம் குளிரக் குளிரஅழு தனளோ? தளிரிதழ் காதல் தழற்கஞ் சாதோ? ஏந்திழைக் கென்னைப் பிடித்ததோ இல்லையோ? தேர்ந்த தன்னுளத் திருவுரு வேருே? 26 (i. இவைவிட் டவளை எதுவருத் தியதோ? கவையற் றிருத்த கடிமலர்க் கொடி அவள்! அவளைத் தாங்கிய அயராக் கொம்பு,யான்! துவளத் துவள அழுது துடித்திட வேறென் காரணம் உண்டென விளங்கிலேன்; கூறெனக் கேட்கவும் நெஞ்சங் குன்றினேன்: